இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Saturday, October 29, 2011

திறந்த நிரல் என்றால் என்ன ? < What is Open Source ? >

கணினி பயன் படுத்தும் பலரும் அடிக்கடி கேள்விப்படும் வாரத்தை இந்த ஓபன் சோர்ஸ் ( Open Source ) .
தமிழில் இதனை திறந்த நிரல் என்று அழைக்கலாம் ...

சரி , ஓபன் சோர்ஸ் என்பது என்ன ... இந்த திறந்த நிரல் மென்பொருளால் என்ன பயன் ...

 திறந்த நிரல் என்பது ஒரு வகை மென்பொருள் ... இந்த வகையில் நமக்கு வெறும் மென்பொருள் மட்டுமின்றி அதன் மூல குறியீடும் ( Source Code ) கிடைக்கும் .


சரி அப்படி கிடைப்பதால் நமக்கு என்ன பயன் ?
< What is the use of Open Source System ? >


  • இந்த மென்பொருளை நாம் யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் . யாரும் கேள்வி கேக்க போவது இல்லை .
  • இலவசமாக கிடைப்பதால் நிறைய பணம் மிச்சமாகும் .
  • உரிமை (License )வாங்க வேண்டிய அவசியம் இல்ல . எத்தனை முறை வேண்டுமானலும் , எதனை கணிணிகலானாலும் சுதந்திரமாக பதிந்து கொண்டு பயன்படுத்தலாம் .


    மென்பொருள் இலவசமாக தருகிறார்கள் சரி , மூல குறியீடு (Source Code ) எதற்கு ?
    < What is the Use of Source Code ? >


    • அனைத்து மென்பொருளும் ஆயிரக்கணக்கான நிரலாக்க வரிகளை (Programming Lines )கொண்டு உருவாக்க பட்டவைதான் ...
    • ஆனால் பெரும்பாலான வர்த்தக மென்பொருள் நிறுவனங்கள் இந்த மூல குறியீட்டை இரகசியமாக வைத்திருக்கும் , அவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்வது இல்லை .
    • இதனால் அந்த மென்பொருள் பயன்படுத்துகையில் ஏதேனும் கோளாறு வந்தாலும் , அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை தவிர வேறு யாரு கையாள இயலாது ...
    • திறந்த நிலை மென்பொருள் பொறுத்த வரையில் , அதன் மூல குறியீடும் நம் கைகளில் கிடைப்பதால் , நம் பதிப்பை நாம் எப்படி வேண்டுமானலும் மாற்றி அமைத்து கொள்ளலாம் ( நிரலாக்க மொழிகள் தெரிந்தால் ) .
    • யாரையும் சார்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை ...


      இலவச மென்பொருளுக்கும் , திறந்த நிரல் மென்பொருளுக்கும் என்ன வித்யாசம் ?
      < What is the Difference Between Open Source and Freeware ? >


      • இரண்டும் இலவசமாக கிடைக்கும் ...
      •  இலவச மென்பொருள் என்று சொல்லப்படுபவை , தொகுக்கப்பட்ட (Compiled) பதிப்பாக மட்டுமே கிடைக்கும் .
      • மூல குறியீடும் உடனே தரப்படும் என்று சொல்லுவதற்கில்லை ...
      • இலவச மென்பொருளை பகிர்ந்து கொள்வதில் கூட சில நேரங்களில் பிரச்னை வரலாம் , அது அந்த நிறுவனத்தின் உரிம உடன்பாட்டை பொருத்து அமையும் .
      • ஆனால் திறந்த நிரல் என்று வருகையில் , நம் கையில் முழு சுதந்திரம் கிடைக்கும் , கூடவே மூல குறியீடும் கிடைத்து விடும் . 


        அதெல்லாம் சரி , இந்த திறந்த நிரல் வகையில் என்னென்ன மாதிரியான மென்பொருட்கள் கிடைக்கும் ? 
        < What Kind of software are available in open source ? >

        • நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள் முதல் , அலுவலக தேவைகளுக்கு பயன்படும் மென்பொருள் வரை ஆயிரக்கணக்கான மென்பொருள் உள்ளன .
        • ( இவற்றை பற்றி தனியே பதிகிறேன் ....)


           இந்த திறந்த நிரல் மென்பொருள் எல்லாம் எங்கு கிடைக்கும் ?
          < Where we can get Open Source Software ? >

          • இணையத்தில் இன்று ஏகப்பட்ட தளங்கள் இதற்கென்றே செயல் படுகின்றன . 
          • அது தவிர அந்தந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வமான தளங்களிலும் இவை கிடைக்கின்றன . நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 
          • இல்லையேல் , நம் நண்பர்களிடம் பெற்று கொள்ளலாம் , யாரு கேக்க போறாங்க ....
          • ( அது போன்ற தளங்கள் பற்றி பின்வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன் )