இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Saturday, June 9, 2012

வேலியே பயிரை மேய்வதா ... ? பேருந்து நடத்துனர் மற்றும் ஒட்டுனரே பயணிகளின் உடைமைகளை திருடுவதா .... ??

வேலியே பயிரை மேய்வதா ... ? 

அன்று சனிக்கிழமை , மதியம் மணி 4 இருக்கும் ...நண்பர்களுடன் கொடிவேரி சென்றுவிட்டு வீடு திரும்பினேன் ...

கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தோம் ...

என் பணம் மற்றும் கைப்பேசி அனைத்தும் , என் நண்பனின் பையில் வைத்திருந்தேன் ...

இருக்கைகள் நெருக்கமாக இருந்ததால் , நண்பன் அந்த பையை , இருக்கைக்கு மேல் இருக்கும் பகுதியில் வைத்தான் ...

பேருந்து சத்தியமங்கலத்தில் நின்றது ... எல்லோரும் இறங்க பேருந்து காலி ஆனது ... நாங்களும் தேநீர் அருந்த கீழே இருங்கினோம் ...

பின்னர்தான்  அறிந்தோம் , எங்கள் பை அந்த பேருந்தில் உள்ளது என்று , மறந்து அங்கேயே வைத்து விட்டோம் ...

நண்பன் சென்று , நடத்துனரிடம் சொல்லிகேட்டு அந்த பையை எடுத்து வந்தான் ...

அதை திறந்து பார்க்கையில் அதிர்ச்சி ... உள்ளே இருந்த எனது பணப்பை ( Wallet ) அதில் இல்லை ... எங்கும் தேடி கிடைக்கவில்லை ... 


ஒரு வேலை அந்த பேருந்தில் விழுந்திருக்குமோ என்று அங்கும் சென்று தேடினான் , கிடைக்கவில்லை ... 


ஓட்டுனரிடம் சென்று கேட்டோம் , தெரியாது என்று சொல்லி விட்டார் ...


அங்கேயே மீண்டும் தேடினோம் ... அப்போது நடத்துனர் வர , அவரிடம் கேட்டோம் ... அவரும் தெரியாது என்று கூற ... செய்வது அறியாது அங்கேயே அமர்ந்தோம் ...




பின்னர் , ஓட்டுனரிடம் ஏதோ பேசிய நடத்துனர் எங்களை அழைத்தார் ...


இதுவா பாருங்க என்று கூறு எனது பணப்பையை எடுத்து நீட்டினார் ...


எனது பணப்பை தான் தினமும் பார்த்தது தான் , இருந்தாலும் அப்போது அதை பார்த்ததும் இனம் புரியாத மகிழ்ச்சி ...


ஆமாம் என்று கூறி , அதை வாங்க கை நீட்டினேன் , "சரிப்பா , ஒரு 50 ரூபாய் எடுத்துட்டு தர்றேன் " என்றார் நடத்துனர் ...
எதற்கு  என்று நான் கேட்க்க , " உனக்கு வேணுமா வேண்டாமா ? வேணும்னா 50 ரூபாய் கொடுத்துட்டு வாங்கிட்டு போ " என்று எனது பொருளுக்கு என்னிடமே பேரம் பேசினார் ... எங்கள் நிலைமையை நடத்துனரிடம் எடுத்து கூற , அவர் கொடுத்துவிடும் படி ஓட்டுனரிடம் கூற ... ஒரு வழியாக பணப்பை கிடைத்தது ...


நிம்மதியாக ஒரு கோவை பேருந்தில் ஏறினோம் ... திறந்து பார்க்கையில் மீண்டும் அதிர்ச்சி ... 450 ருபாய் வைத்திருந்தேன் வெறும் 250 மட்டுமே உள்ளே இருந்தது ... இறங்கி வருவதற்குள் அந்த பேருந்து கிளம்பி விட்டது ...


வேறு வழி இன்றி , 200 ரூபாயை பறிகொடுத்து விட்டு , கோவை வந்து சேர்ந்தோம் ....


இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி .... ?

பேஸ்புக் , கூகுள் : இந்தியாவில் தடையா ???

பேஸ்புக் , கூகுள் : இந்தியாவில் தடையா  ???




சில நாட்களுக்கு முன்னர் , இந்திய உயர் நீதிமன்றம் ஒரு வழக்கின் பெயரில் , கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களுக்குஎச்சரிக்கை விடுத்துள்ளது ...

இந்த தளங்களில் சில மதங்களுக்கும் , அரசுக்கும் எதிரான மற்றும் முரண்பாடான தகவல்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்றும் , இல்லையேல் சீனாவில் இருப்பது போல் இந்தியாவிலும் அந்த தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்பது போல் எச்சரித்துள்ளது ...





பேஸ்புக் என்பது மிகப்பெரிய பிணையம் ... அதில் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான பதிவுகள் புதிதாக ஏற்றப்படுகின்றன ... அவை அனைத்தையும் கண்காணித்து , தணிக்கை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது என்று தெரியவில்லை ....

சமீப காலமாக தொலைதொடர்பு துறை எடுக்கும் சில முடிவுகள் , மக்களின் உரிமைகளை பறிப்பது போல் எனக்கு தோன்றுகிறது ....

சில மாதங்களுக்கு முன்னர் , குறுஞ்செய்தி எனப்படும் ( SMS ) அனுப்ப சில கட்டுபாடுகளை அரசு விதித்தது ...
ஒரு  நாளைக்கு 100 SMS என்றது , பின்னர் பல தரப்புகளில் இருந்து வந்த வேண்டுகோளின் பெயரில் அது 200 ஆகா அதிகரிக்கப்பட்டது ...
தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் SMS போன்றவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்று அரசு வாதிட்டது ...

ஆனால் இன்றும் எனக்கு அது போன்ற விளம்பர SMS வந்து கொண்டுதான் இருக்கிறது ...



இப்படி மக்கள் நலன் என்ற பெயரில் மக்களின் உரிமைகள் பறிக்கபடுவதாக நான் கருதுகிறேன் ...

இது தொடர்ந்தால் , பேஸ்புக் , கூகுள் போன்ற இணையதளங்களின் பாடு என்ன ஆகும் என்பது கேள்வி குறிதான் ...

Wednesday, May 30, 2012

காதல் சொன்ன நேரம் ...

காதல் சொன்ன நேரம் ...


 விடியாத அதிகாலை நேரம் ...
மாசற்ற நெடுஞ்சாலை ஓரம் ...
வாசத்துடன் பனிக்காற்றும் வீச ...
நேசத்துடன் இரு கண்கள் பேச ...
நான் காதல் சொன்ன நேரம் ...
அதை அவள் காதில் சொன்ன நேரம் ...
அந்த வானவில்லின் ஓரம் ,
புதிய வண்ணமொன்று தோன்ற ....
அவள் கண்கள் என்னை நோக்க ....
என்மேல் காதல் சாரல் அடிக்க ...
கட்டி வைத்த மனசு , அது கட்டவிழ்த்து பறக்க ...
மூடி வைத்த வெட்கம் , கூடி வந்து நிற்க ...
பேச நினைத்த போதும் , அடடா வார்த்தை கிடைக்கவில்லை ...
தமிழன் என்ற போதும் , எனக்கு மொழியும் உதவவில்லை ...



மௌனம் காதல் பேச , கண்கள் கவிதை பாட ..
கைகள் தாளம் போட , கால்கள் நடனம் ஆடின ...
அவள் மூச்சு காற்றின் வெப்பம் , எந்தன் சுவாச காற்றை எரிக்க ...
என் இதைய துடிப்பின் வேகம் , அந்த ஒளியின் வேகத்தை மிஞ்ச ...
அவள் கைகள் தொட்ட தருணம் , எந்தன் உயிரை தொட்டது மரணம் ...
அவள் ஒளித்து வைத்த காதல் , என் உதிரம் முழுதும் பரவ ....
காதல் என்ற காட்டில் , வேண்டி மாட்டிகொண்டோம் ...
திரும்பி செல்லப் பார்த்தும் , பாதை தெரிய இல்லை ...



 திரும்பி செல்ல முயன்றால் , அந்த காதல் உண்மை இல்லை ...
 அன்று , காதல் தவறு என்றேன் ... இன்றோ காதல் கடிதம் தந்தேன் ....
 வேலி போட்ட நானே , இன்று எந்தன் பயிரை மேய்ந்தேன் ...
காதல் என்ற நூலில் , நல்ல கல்வி ஒன்று கற்றேன் ...
காதல் தோற்பதும் இல்லை , வெல்வதும் இல்லை ...
எண்ணங்கள் ஏமாற்றும் போதும் , ஏமாற்றம் வலிக்கும் போதும் ...
அச்சங்கள் அழைக்கும் போதும் , நம்பிக்கை நகைக்கும் போதும்
காதலர்கள் தோற்கிறார்கள் , காதலை தூற்றுகிறார்கள் ...
எண்ணங்களையும் ஏமாற்றங்களையும் ,
அச்சங்களும் நம்பிக்கைகளையும் வென்றவர்கள் ...
காதலை போற்றுகின்றனர் ....
வெற்றியும் தோல்வியும் காதலுக்கு இல்லை , காதலர்களுக்கே ...
காதல் சொன்ன நேரம் .... என் வாழ்வை உணர்ந்த நேரம் ... !





Monday, February 20, 2012

மரங்களின் மடல் ...

 மரங்களின் மடல் ...

மரங்களின் மடல் ...

உயிர் இருந்தும் நிலையானோம் ...

நிலை பெற்றும் நிழல் தந்தோம் ...

நிழல் தந்து சிலை காத்தோம் ...

நான்  காத்த சிலை உன்னை காக்கும் என்றாய

சிலை காத்த என்னை ஏன் காக்க மறந்தாய் ...

கரிவாயு உட்கொண்டு , உயிர் வாயு உமக்களித்தோம் ....


பிறர்  , உயிர் பிழைக்க மழை தந்தோம் ...

வந்த , மழை கொண்டே உயிர்  பிழைத்தோம் ....

எழுத்துக்கு காகிதமாய் ,உலகெங்கும் உருப்பெற்றோம் ...

எதையெதையோ உருவாக்க , எரிபொருளாய் உருக்குலைந்தோம் ...

பசுமை என்னும் பாற்கடலை , மண் மேலே படைத்திருந்தோம்  ....

ரசனை என்பது சிறிதுமின்றி , வனத்தோடு வதம் செய்தாய் ...

வானளவு வளர்ந்திருந்தோம் , வாள் கொண்டு வதை செய்தாய் ...

நோயற்ற வாழ்வளித்தோம் , நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டாய் ...

வானம் பார்த்த பூமியிலே , வனம் காக்க யாருமில்லை ...

வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் , வீதிக்கே மழை கொடுப்போம் ...

காட்டை நீ காத்து வந்தால் , நாட்டுக்கே நலம் சேர்ப்போம் ...

வனம் யாவும் செழித்திருந்தால் , வளமாகும் தேசம் எங்கும் ...

இயற்கை வளங்களை  காத்திடுவோம் , இயற்கையோடு  இணைந்திருப்போம் ...



Wednesday, February 15, 2012

காதல் ஓவியம் ...

காதல் ஓவியம் ...
காதல் -  ஒரு அழகான ஓவியம் ...

வரைய  தெரிந்தவன் அழகு சேர்க்கிறான் ...

வரைய தெரியாதவன் அதன் அழகை ரசிக்கிறான் ...

ரசிக்க தெரிந்தவனுக்கு அது அற்புதம் ...

ரசிக்க  தெரியாதவனுக்கு அது அற்பம் ...

ஓவியம் பழையதாயினும் ...

அது சொல்லும் காவியம் இனியதாகும் ...

காதல் - அழகிய காவியம் பாடும் ஓர் ஓவியம் ....

Tuesday, February 7, 2012

ஏன் இந்த பிரிவினை ..... ! ? --- Yen Intha Pirivinai ---

எவனோ ஒருவன் சொல்லுக்கு ..

ஏனென்ற கேள்வி கேட்க்காமல் ...

மூன்றாம் நபருக்கு மூளையை விற்கும் ....

மென்பொருள் துறையினரை போற்றும் இந்த சமூகம் ...

சொந்த சிந்தனைகளை வியர்வை சிந்தி உருவாக்கும் ...

இந்த திரை உலக கலைஞர்களை தூற்றுவது ஏன் ????

கலை என்ற அடிப்படையில் ....

மென்பொருள் எழுதுவதும் , திரைக்கதை எழுதுவதும் ஒன்றே ...

இரண்டையும் சிறப்பாய் செய்வது அவ்வளவு எளிதல்ல ...

பின்பு ஏன் இந்த பிரிவினை ..... ! ?


நாளை உன் வாழ்வை மாற்றலாம் --- Naalai Un Vaazhvai Maattralaam ---



இதயம் இன்றி உயிர் வாழ முடியுமா ?


முடியாது என்றால் நீ முட்டாள் ...


ஏன் , தாவரங்கள் வாழவில்லையா ??


சூரியன் மேற்கே உதிக்குமா ? ஏன் உதிக்காது ..


திசைகளின் பெயரை மாற்றி வை ... தெற்கிலும் உதிக்கும் ...




முடியாது என்ற சொல்லுக்கு பொருள் தேடிப்பார் ...




முடியும் என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் அது ...


இல்லை இல்லை ... உந்தன் எதிரிச் சொல் அது ...


நண்பன் அருகில் இருக்கையில் , எதிரியின் துணை எதற்கு ...


எதிரியை விலக்கிவிட்டு , முயற்சியை நண்பனாக்கு ...






ஒரு ருபாய் தருகிறேன் ...


அதை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்காதே ...


அதே ஒரு ரூபாய்யை எப்படி செய்யலாம் என்று சிந்தித்து பார் ...




இருப்பதை இழப்பதை விட ... நினைப்பதை நிஜமாக்கு ...




சமுதாயத்தின் எண்ணங்களை மறந்துவிடு ...


உந்தன் எண்ணங்களுக்கு மதிப்பு கொடு ...


அவமானங்களை பொருத்துக்கொள் .....


அதற்காக அமைதி வேண்டாம் ....


உன்னை பற்றி நீ பேசு ... பிறர் பேச வாய்ப்பளிக்கதே ...


உன்னை இகழ்பவன் இகழட்டும் ...  அவனுக்கு தெரிந்தது அதுதான் ...



சட்டைப் பையில் இல்லை வெற்றி , தூரம் அதிகம்தான் ....


நடப்பதற்கு சங்கடம் வேண்டாம் ... கால்கள் இருப்பது அதற்குதான் ...


நம்பிக்கை இழப்பதை தவிர்த்து விடு ... முடியும் என்பதை நினைவில் எடு ...


முன்னேற மூளை வேண்டாம் ... விடிகின்ற காலை போதும் ...


நாளை உன் வாழ்வை மாற்றலாம் ... நம்பிக்கை வை நண்பனே ....



Sunday, February 5, 2012

சிந்தனை செய் ... --- Sinthanai Sei ---

சிந்தனை செய் ...
பந்தயத்தில் ஆயிரம் பேர் முன்னே ஓடுகையில் , நீ மட்டும் பின்னே ஓடிப்பார் ...
உலகமே உன்னை பார்க்கும் ...
செய்வது தவறே ஆயினும் அதை தனித்துவத்துடன் செய் ...
இன்று அவமானப் பட்டால்தான் நாளை அரசாள முடியும் ....
சிந்தனை செய் !



Monday, January 30, 2012

காதல் நொடிகள் .... --- Kaathal Nodigal ---


உன்னை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் உன்னை சந்திக்க நேர்ந்தது ...
அதியசம் என்றிருந்தேன் ...
பின்புதான் கண்டறிந்தேன் ...
நொடிக்கு நொடி உன்னை பற்றிதான் சிந்தனை என்று ...

Friday, January 27, 2012

நம்பிக்கை

இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை ... மறைக்கின்றன ...
உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை ... தள்ளி வைக்கின்றன ...

தோல்விகள்  உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும் ...
 அவற்றை தோழனாக ஏற்றுக்கொள் ...

உன்னுடைய  தோல்வியில் இன்னொருவனின் வெற்றி ஒளிந்திருக்கிறது ...
உன்னுடைய வெற்றியில் மற்றொருவனின் தோல்வி மறைந்திருக்கும் ...

தொடர் தோல்வி அனுபவத்தை தரும் , வெறும்  வெற்றியோ ஆணவத்தை தரும் ..
ஆணவத்தால் அழிவதை விட அனுபவத்தால் உயர்ந்திடு தோழா ....

உயிர் உள்ளவரை போராடு ....
உலகில் உள்ளவரை நடைபோடு ....