இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Tuesday, November 29, 2011

உயிர் < Uyir >

" நீ கீழே விழுந்து என்னை மேலே ஏற்றுகிறாய் ...


உயிரிழந்து எனக்கு உயிரளித்த உன்னை ,


எந்தன் உயிராக உள்ளே ஏற்கிறேன் ..... "

மழைத்துளியைப் பார்த்து புல்வெளி சொன்னது 

Sunday, November 27, 2011

தனிமை < Thanimai >


தனிமை < Thanimai >
நீ எனக்கு இல்லை என்று தெரிந்தும் , உனக்காக கண்ணீர் விட்டது என் கண்கள் ....
உனக்காக கண்ணீர் சிந்திய என் கண்களை கண்ணாடியில் பார்க்கும் போது ,
என் கரு விழிகளின் ஓரத்தில் காலம் கற்பித்த உண்மைகள் கண்ணீராய் கலங்கி  ,பனியின் சிறு துளி போல கண் சிமிட்டாமல் சிந்துகின்றன ....
என்னை  விலகி விட்ட பிறகும் உன்னை விரும்புவது என் தவறா ....
இல்லை என்னை விட்டு சென்றது உன் தவறா ...
நாம் சந்தித்து கொண்டது  காலத்தின் தவறா ?
தவறுகளை கண்டறிந்து தண்டனை தர போவதில்லை.
நாட்கள் நகர்ந்து செல்ல , நினைவுகள் மறந்து போகலாம்.
இன்று நிஜங்களாக நம் முன் இருப்பவை , நாளை நிழல்களாக பின்னால் போகலாம் ...
இன்று உன்னை மறக்க நேரம் இல்லாத எனக்கு , காலத்தின் கட்டாயத்தால் ஒரு நாள் உன்னை நினைக்கவும் நேரம் இருக்காது ....
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள்  எல்லாம் நீடிக்க வேண்டும் என்று விரும்பிய எனக்கு இனிமேல்  தனிமைதான் நீடிக்குமோ ...
உன்மேல் பாசம் வைத்து பழகிய பாவத்துக்காக நீ தந்த பரிசு இந்த தனிமை ....
தனிமை என்றும் வெறுமையை தருவதில்லை ...
தன்னம்பிக்கை தருகிறது ...
நீ இல்லாமலும் வாழ முடியும் என்று ....
உன்னோடு இருந்த இனிமையான காலங்கள் எல்லாம் ,
கற்ப்பனைகலாகவும் , கனவுகளாகவும் என் கண்களுக்குள் புகுந்து கண்ணீராக வேதியல் மாற்றம் பெறுகின்றன ...
தனிமையில் இனிமை காண முடியுமா என்றால் , முடியும் என்பேன் ....
தனிமையை உணர்த்தும் ஒரு உயிர் உன்னோடு இருந்திருந்தால் .....

< அன்னையின் அன்பு > < Love Of Mother >


< அன்னையின் அன்பு > < Love Of Mother >
கண்களில் கதைகள் சொன்னவளே ...
புவி பெண்களில் சிறந்தவள் நீ என்பேன் ....
முதல் முதலாய் என்னை தொட்டவளே ...
எந்தன் முகம் பார்த்து உயிர் பெற்றவளே ...
என் காலாலே உன்னை எட்டி உதைத்தும் ...
எந்தன் கரம் பிடித்து என்னை கட்டி அணைத்தாய் ...
முகம் எங்கும் நீ முத்தமிட்டாய் ...
ச்சீ... எச்சில் என்று நான் தட்டி விட்டேன் ...
தொட்டில் கட்டி தாலாட்டி ...
தாகம் தீர பாலூட்டி ...
தேனும் பழமும் கலந்தளித்து...
தேகம் வளர வழி செய்தாய் ...
இளைப்பாற மடி கொடுத்து ....
இசை பாடி உறங்க வைத்தாய் ....
நான் துடித்தால் நீ அழுதாய் ...
நீ அழுதால் நான் துடிப்பேன் ....
வெயில்லினிலே வேர்த்த எனக்கு ...
கைகளாலே காற்றடிதாய் ....
கண் கலங்கி நான் நிற்க ,
காற்றை கையில் பிடித்து  வைப்பாய்
தூசி விழ கூடாதென்று ...
மழை துளியில் நான் நனைந்தால் ,
மரமாகி குடை பிடிப்பாய் ....
பத்து மாதம் என்னை சுமந்தெடுதாய் ...
செத்து போகும் வரை உன்னை சுமந்திருப்பேன் ...
என்னை உயிர் எழுத்து எழுத வைத்தாய் ...
உந்தன் உயிராக நான் இருப்பேன் ....
நிலா சோறு ஊட்டி விட்டாய் ...
உந்தன் நிழலாக நான் இருப்பேன் ...
ஆலயங்கள் அழைத்து சென்றாய் ,
அம்மன் தானென்று தெரியாதவளே ....
பள்ளிக்கூடம் கண்டதில்லை நீ ,
என்னை படிப்படியாய் படிக்க வைத்தாய் ...
படிப்பறிவு ஏதும் இல்லை உனக்கு ,
என்னை பக்குவமாய் பார்த்துக்கொண்டாய் ...
எட்டாத வானுக்கும் ஏணி வைத்து ,
ஏழு வண்ண வானவில்லை எட்டிப்பிடித்து ,
சூடான சூரியனை பேனாவாக்கி ...
வெள்ளை நிற வெண்ணிலவே மையாக ...
பால் வீதியில் படலமைப்பேன் ...
என் அன்னையின் அன்பை பற்றி ....

-----
சந்தோஷ் 
http://kovaitamilan.co.cc
-----

Tuesday, November 1, 2011

இலவச லினக்ஸ் இயங்குதளம் < Free Open Source Linux Operating Systems >

திறந்த நிரல் மென்பொருள் பட்டியல் ...

இந்த இலவச மற்றும் திறந்த நிரல் வகையில் என்ன மாதிரி மென்பொருள் கிடைக்கின்றன ...  ???


கவலையே வேண்டாம் .... இயங்குதளம் (Operating System ) முதற்கொண்டு அனைத்து வகை மென்பொருளும் இன்று இலவசமாக கிடைக்கின்றன ...


ஒரு கணிணி மட்டும் கையில் இருந்தால் போதும் சாதாரண மக்களும் பெரும் பண செலவின்றி , எளிய வகையில் பயன் பெறலாம் ...

இயங்குதளங்கள் ( Operating System ) :

இயங்குதளம் இல்லாத ஒரு கணிணி உயிர் இல்லாத வெறும் உடல் போல ...
கணிணி மட்டும் இல்லை , நம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசியில் கூட இயங்குதளம் உண்டு ...


உலகம் முழுதும் அதுகம் பயன்படுத்தப்படும் இயங்குதளம் , மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ( Microsoft Windows ) ... 


இதை உரிமம் பெற்று பயன்படுத்த சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும் ...


அதற்க்கு மாற்றாக வந்தது தான் லினக்ஸ் (Linux ) எனப்படும் இயங்குதளம் ....
லினக்ஸ் பற்றி பேச வேண்டுமானால் அதற்கென்று ஒரு தனி வரலாறு உண்டு ...


அதை பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம் ....


லினக்ஸ் அடிப்படையில் வரும் அனைத்தும் லினக்ஸ் விநியோகம் என்று அழைக்கபடுகின்றன ...லினக்ஸ்'ன் கீழ் நிறைய இயங்குதளங்கள் கிடைக்கின்றன ...


மிக பிரபலமான ஐந்து பற்றி பார்க்கலாம் ....
Top 5 / Best 5 Linux OS Distributions ...

  • உபுண்டு ( Ubuntu )
இது லினக்ஸ் வகையை சார்ந்த மிக பிரபலாமான இயங்குதளம் ... 


விண்டோஸ் போன்றே வரைகலை பயனர் இடைமுகம் (Graphical User Interface ) கொண்டது ...

பயன் படுத்த மிகவும் எளிமையானது ...

தொடக்க நிலை லினக்ஸ் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும் ...
பல மொழிகளில் கிடைக்கிறது , தமிழ் உட்பட ....

இதன் சமீபத்திய பதிப்பு , உபுண்டு 11.10 ...

இதனை பதிவிறக்கம் செய்ய ... கீழே சொடுக்கவும் ....



  • பெடோரா ( Fedora )


ரெட் ஹேட் (Red Hat ) நிறுவனத்தின் இயங்குதளம் ...


இதுவும் மிக பிரபலமான இயங்குதளம் ...


உபுண்டு போன்றே ( GNOME ) டெஸ்க்டாப் சூழலை கொண்டது ...


பயன்படுத்த மிகவும் எளிமையானது ...


அனைத்து புதிய மென்பொருள்களுடன் கிடைக்கும் லினக்ஸ் பதிப்பு ...


இதன் சமீபத்திய பதிப்பு , பெடோரா 16


தரவிறக்கம் செய்ய ( பெடோரா 16 )


Download Fedora 16


  • ரெட் ஹேட் ( Red Hat Linux )
இலவச , திறந்த நிரல் மென்பொருள் என்ற பொழுதும் ரெட் ஹேட் லினக்ஸ் மட்டும் சிறிதளவு பணம் செலுத்தி பெற வேண்டும் ...

செலுத்தும் பணம் மென்பொருளுக்கு அல்ல , ரெட் ஹேட் நிறுவணம் அளிக்கும் உதவிக்கு ...

இந்த இயங்குதளம் சேவையகங்களுக்கு (Servers )என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது ...

பெரும் நிறுவனங்களுக்கு ஏற்றது ... சிறப்பானதும் கூட ... 

இதன் பயன்களை , மற்றும் நிறுவணம் அளிக்கும் உதவிகளை பார்க்கையில் , செலுத்தும் பணத்திற்கான மதிப்பை அடையலாம் ...

இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழிமுறைகள் , கீழ் காணும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன ...




  • டெபியன் ( Debian ) 
மற்றுமொரு GNU/லினக்ஸ் வகையை சார்ந்த இயங்குதளம் ...

பல ஆயிரக்கணக்கான மென்பொருள்களை வழங்குகிறது ...

உடனடி மின்னச்சல் உதவி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர் ...



  • லினக்ஸ் மின்ட் ( Linux Mint ) 

உபுண்டு லினக்ஸ் சார்ந்து உருவாக்கப்பட்ட லினக்ஸ் ...

லினக்ஸ் இயங்குதளத்தில் ஒரு புது அனுபவத்தை அளிக்கிறது ....

சிறப்பான டெஸ்க்டாப் உடன் அதே லினக்ஸ்'ன் ஆற்றலையும் கொண்டுள்ளது ...

கிட்டத்தட்ட 30,000 க்கும் மேல் மென்பொருள் தொகுப்புகளை அளிக்கிறது ...