இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Monday, February 20, 2012

மரங்களின் மடல் ...

 மரங்களின் மடல் ...

மரங்களின் மடல் ...

உயிர் இருந்தும் நிலையானோம் ...

நிலை பெற்றும் நிழல் தந்தோம் ...

நிழல் தந்து சிலை காத்தோம் ...

நான்  காத்த சிலை உன்னை காக்கும் என்றாய

சிலை காத்த என்னை ஏன் காக்க மறந்தாய் ...

கரிவாயு உட்கொண்டு , உயிர் வாயு உமக்களித்தோம் ....


பிறர்  , உயிர் பிழைக்க மழை தந்தோம் ...

வந்த , மழை கொண்டே உயிர்  பிழைத்தோம் ....

எழுத்துக்கு காகிதமாய் ,உலகெங்கும் உருப்பெற்றோம் ...

எதையெதையோ உருவாக்க , எரிபொருளாய் உருக்குலைந்தோம் ...

பசுமை என்னும் பாற்கடலை , மண் மேலே படைத்திருந்தோம்  ....

ரசனை என்பது சிறிதுமின்றி , வனத்தோடு வதம் செய்தாய் ...

வானளவு வளர்ந்திருந்தோம் , வாள் கொண்டு வதை செய்தாய் ...

நோயற்ற வாழ்வளித்தோம் , நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டாய் ...

வானம் பார்த்த பூமியிலே , வனம் காக்க யாருமில்லை ...

வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் , வீதிக்கே மழை கொடுப்போம் ...

காட்டை நீ காத்து வந்தால் , நாட்டுக்கே நலம் சேர்ப்போம் ...

வனம் யாவும் செழித்திருந்தால் , வளமாகும் தேசம் எங்கும் ...

இயற்கை வளங்களை  காத்திடுவோம் , இயற்கையோடு  இணைந்திருப்போம் ...



Wednesday, February 15, 2012

காதல் ஓவியம் ...

காதல் ஓவியம் ...
காதல் -  ஒரு அழகான ஓவியம் ...

வரைய  தெரிந்தவன் அழகு சேர்க்கிறான் ...

வரைய தெரியாதவன் அதன் அழகை ரசிக்கிறான் ...

ரசிக்க தெரிந்தவனுக்கு அது அற்புதம் ...

ரசிக்க  தெரியாதவனுக்கு அது அற்பம் ...

ஓவியம் பழையதாயினும் ...

அது சொல்லும் காவியம் இனியதாகும் ...

காதல் - அழகிய காவியம் பாடும் ஓர் ஓவியம் ....

Tuesday, February 7, 2012

ஏன் இந்த பிரிவினை ..... ! ? --- Yen Intha Pirivinai ---

எவனோ ஒருவன் சொல்லுக்கு ..

ஏனென்ற கேள்வி கேட்க்காமல் ...

மூன்றாம் நபருக்கு மூளையை விற்கும் ....

மென்பொருள் துறையினரை போற்றும் இந்த சமூகம் ...

சொந்த சிந்தனைகளை வியர்வை சிந்தி உருவாக்கும் ...

இந்த திரை உலக கலைஞர்களை தூற்றுவது ஏன் ????

கலை என்ற அடிப்படையில் ....

மென்பொருள் எழுதுவதும் , திரைக்கதை எழுதுவதும் ஒன்றே ...

இரண்டையும் சிறப்பாய் செய்வது அவ்வளவு எளிதல்ல ...

பின்பு ஏன் இந்த பிரிவினை ..... ! ?


நாளை உன் வாழ்வை மாற்றலாம் --- Naalai Un Vaazhvai Maattralaam ---



இதயம் இன்றி உயிர் வாழ முடியுமா ?


முடியாது என்றால் நீ முட்டாள் ...


ஏன் , தாவரங்கள் வாழவில்லையா ??


சூரியன் மேற்கே உதிக்குமா ? ஏன் உதிக்காது ..


திசைகளின் பெயரை மாற்றி வை ... தெற்கிலும் உதிக்கும் ...




முடியாது என்ற சொல்லுக்கு பொருள் தேடிப்பார் ...




முடியும் என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் அது ...


இல்லை இல்லை ... உந்தன் எதிரிச் சொல் அது ...


நண்பன் அருகில் இருக்கையில் , எதிரியின் துணை எதற்கு ...


எதிரியை விலக்கிவிட்டு , முயற்சியை நண்பனாக்கு ...






ஒரு ருபாய் தருகிறேன் ...


அதை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்காதே ...


அதே ஒரு ரூபாய்யை எப்படி செய்யலாம் என்று சிந்தித்து பார் ...




இருப்பதை இழப்பதை விட ... நினைப்பதை நிஜமாக்கு ...




சமுதாயத்தின் எண்ணங்களை மறந்துவிடு ...


உந்தன் எண்ணங்களுக்கு மதிப்பு கொடு ...


அவமானங்களை பொருத்துக்கொள் .....


அதற்காக அமைதி வேண்டாம் ....


உன்னை பற்றி நீ பேசு ... பிறர் பேச வாய்ப்பளிக்கதே ...


உன்னை இகழ்பவன் இகழட்டும் ...  அவனுக்கு தெரிந்தது அதுதான் ...



சட்டைப் பையில் இல்லை வெற்றி , தூரம் அதிகம்தான் ....


நடப்பதற்கு சங்கடம் வேண்டாம் ... கால்கள் இருப்பது அதற்குதான் ...


நம்பிக்கை இழப்பதை தவிர்த்து விடு ... முடியும் என்பதை நினைவில் எடு ...


முன்னேற மூளை வேண்டாம் ... விடிகின்ற காலை போதும் ...


நாளை உன் வாழ்வை மாற்றலாம் ... நம்பிக்கை வை நண்பனே ....



Sunday, February 5, 2012

சிந்தனை செய் ... --- Sinthanai Sei ---

சிந்தனை செய் ...
பந்தயத்தில் ஆயிரம் பேர் முன்னே ஓடுகையில் , நீ மட்டும் பின்னே ஓடிப்பார் ...
உலகமே உன்னை பார்க்கும் ...
செய்வது தவறே ஆயினும் அதை தனித்துவத்துடன் செய் ...
இன்று அவமானப் பட்டால்தான் நாளை அரசாள முடியும் ....
சிந்தனை செய் !